திமுகவில் இணைந்த ரஜினி மன்றத்தினர்

திமுகவில் இணைந்த ரஜினி மன்றத்தினர்

திருச்சி, திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மலைக்கோட்டை பகுதியைச் சார்ந்த ரஜினி மன்றத்தை சார்ந்தவர்களும் மாற்றுக் கட்சியில் இருந்து பலர் விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மு.மதிவாணன் மற்றும் மலைக்கோட்டை பகுதி கழக, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்
