திருச்சி அருகே கடன் தகராறில் ஊராட்சி துணைத்தலைவர் உட்பட 3  பேர் மீது வழக்குப்பதிவு:

0
1 full

திருச்சி அருகே கடன் தகராறில் ஊராட்சி துணைத்தலைவர் உட்பட 3  பேர் மீது வழக்குப்பதிவு:

திருச்சி, பெருகமணி பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை (34), பெருகமணி ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார்.  இவர் காமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவருக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார்.அதற்கு வட்டியுடன் சேர்ந்து ரூ.2 லட்சம் வாங்கியதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அசோகனிடம் ரூ.6 லட்சம் கொடுத்ததாக கூறி மேலும் பணம் கேட்டுள்ளார்.

மேலும், மணிமேகலையுடன் வந்த கேசவன், சண்முகம் ஆகியோர் அசோகனிடம் கைகலப்பில் ஈடுப்பட்டனர்.  இதில், படுகாயமடைந்த அசோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருகமணி ஊராட்சி துணைத் தலைவர் மணிமேகலை , உடன் வந்த சண்முகம், கேசவன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், மணிமேகலை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அசோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.