பழநியில் பழங்கால நாணய கண்காட்சி

0

பழநியில் பழங்கால நாணய கண்காட்சி

பழங்கால நாணய கண்காட்சி பழநி தெற்கு ரத வீதி தனியார் மண்டபத்தில் ஜனவரி 8,9&10 மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சி துவங்கியது. கண்காட்சியில் சேரர், சோழர், பாண்டியர்,பல்லவர், சங்ககால நாணயங்களும், பிரிட்டிஷ் இந்தியா, சுதந்திர இந்தியா நாணயங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

உலக நாடுகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, பர்மா, டென்மார்க், ஈக்குவடார், எத்தியோப்பியா, பிரான்ஸ், கானா, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, செக்கோஸ்லோவாகியா, மங்கோலியா, மடகஸ்கார், நியூசிலாந்து, ஓமன், பிலிப்பைன்ஸ், கத்தார், குவைத், ரஷ்யா, ருமேனியா, துருக்கி, வியட்நாம், யூகோஸ்லாவியா, ஜிம்பாபே, சாம்பியா உள்ளிட்ட நாடுகளின் நாணயங்கள், பணத் தாள்கள், அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டு அந்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அஞ்சல் தலையில் பொதுப் பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலை, முதல்நாள் அஞ்சல் உறை, சிறப்பு அஞ்சல் உறை, அஞ்சல்தலை சேகரிப்பிற்கான ஆல்பம், பழங்கால பொருட்கள் என காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

‌சந்தா 1
சந்தா 2

சென்னை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு, கொச்சின்,கேரளா, பாலக்காடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தாங்கள் சேகரித்து வைத்த பழங்கால நாணயங்கள், தபால் தலைகள், பழங்கால பொருட்கள், மன்னர் கால தங்க நாணயங்கள் உள்பட பல்வேறு அரிதான பொருட்களை பார்வைக்கு வைத்து உள்ளனர்.

பொள்ளாச்சி நாணயவியல் கழகத் தலைவர் முரளி, கேரளா நாணயவியல் கழகத் தலைவர் லட்சுமணன், கர்நாடகா நாணயவியல் கழக செயலாளர் பிரசாத், சென்னை நாணயவியல் அமைப்பு தலைவர் சென்னை மணிகண்டன், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனர் தலைவர் விஜயகுமார், திருப்பதி சிம்ஹபுரி நாணயவியல் கழகத் தலைவர் ராஜேஷ், சேலம் நாணயவியல் கழகம் தலைவர் சரவணன், அஞ்சல்தலை, நாணயங்கள், பணத்தாள்கள் சேகரிப்பாளர்கள் எத்திராஜ், குமரன், மணி, சாகுல், சேலம் ராஜேந்திரன், நித்திஷ், மைக்கேல்ராஜ், முகமது சுபேர்,பெரியசாமி, ஆஞ்சநேயலு உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று காட்சி படுத்தினார்கள்.

இது குறித்து நாணய சங்க நிர்வாகி மணிகண்ட பிரபு கூறியதாவது, பழனியில் பழங்கால நாணயக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாணயங்களும், பிரிட்டிஷ் இந்தியா, சுதந்திர இந்தியா, உலக நாடுகளின் நாணயங்கள், பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன . தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களில் உலக நாடுகள் வெளியிட்ட நாணயங்களை ஒரே இடத்தில் காண்பது அரிதாகும். அதே போல உலக அளவில் வெளியிட்டுள்ள அஞ்சல் தலைகளை காண்பதும் அரிதாகும் என்றார்.

கண்காட்சி துவக்க நாளில் ஏராளமான பொதுமக்கள் வந்து பழங்கால நாணயங்கள், பணத் தாள்கள், பழங்காலப் பொருட்கள் மற்றும், தபால் தலைகளை வியப்புடன் பார்த்து சென்றனர். மணிகண்ட பிரபு, சரவணன், சாம்சன்,கதிரவன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.