திருச்சி அருகே 3 பள்ளி மாணவ, மாணவிகள் மாயம்:

திருச்சி அருகே 3 பள்ளி மாணவ, மாணவிகள் மாயம்:
திருச்சி No.1 டோல்கேட் பகுதியில் உள்ள கூத்தூர் காலனியை சேர்ந்த கவியரசன் மகள் வைஷ்ணவி(15), பனமங்கலம் பழையரோடு பகுதியை சேர்ந்த சக்திவேல் மகள் அகல்யா (15), ஜெகதீசன் மகன் வெங்கடேஷ் (15), ஆகிய மூவரும் ஒரே நாளில் மாயாகி உள்ளனர்.
மூவரும் நேற்று முன்தினம் காலையில் தனித்தனியே பள்ளிக்கு மற்றும் கடைக்கு செல்வதாக சென்றனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவ- மாணவிகளை தேடி வருகின்றனர்.
