திருச்சியில் பைக் திருடர்கள் 2 பேர் கைது

திருச்சியில் பைக் திருடர்கள் 2 பேர் கைது
திருச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் வாகன திருட்டை தடுப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று (7.01.2021) காலை திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும் வகையில் வந்த 2 நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் திருச்சி உறையூர் குழுமணி ரோடு காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (20), மற்றும் உறையூர் நவாப் தோட்டம் செவ்வந்தி தோப்பை சேர்ந்த மணிகண்டன் (20) என்பதும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருச்சி கோட்டை பகுதியில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
