ஆதரவற்ற முதியோர் சமூக ஆர்வலர்களால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

0

ஆதரவற்ற முதியோர் சமூக ஆர்வலர்களால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பலர் ஆதரவற்று கிடைத்த உணவை உண்டு சாலையோரம் சுற்றி வருகிறார்கள். பலர் வயோதிக காலத்தில் வீட்டிலிருந்து வீதிக்கு வந்துவிடுகிறார்கள். முதுமைக்கே உரிய தள்ளாமை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள இவர்கள் ஆதரவற்றோராக சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். நிற்க முடியாமல், உட்கார முடியாமல் மழை, வெயில், குளிர் என பல்வேறு சீதோசன நிலைகளிலும்  சாலையோரங்களில் படுத்துக் கிடக்கின்றனர். இவர்களுக்கு ஏற்படும் வலியும் வேதனையும் கொடுமையானது. இவ்வாறு அவதிப்படும் முதியவர்களை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம்.

சந்தா 2

இந்நிலையில் வினைசெய் அறக்கட்டளை, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரி முன்பு உள்ள பிரதான சாலையில் அறியப்படாத அறுபது வயது மதிக்கத்தக்க சுமார் ஐந்து அடி உயரம் கருப்பு நிறம் கொண்ட முதியவர் நீல நிற அரைக் கால் டவுசரும் மூன்று அரைக்கை சட்டையினை ஒன்றாக அணிந்து ஊன்றுகோல் உதவியுடன் கடுங்குளிரில் நிராதரவாய் உள்ளவரை பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மறுவாழ்வு அளிக்கும் வகையில் மீட்டெடுத்தனர். மீட்டெடுத்த நபர் தமிழ் மொழியை தொடர்பில்லாமல் பேசுகிறார்.

‌சந்தா 1

வலது கையில் திருமலை என பச்சை குத்தியுள்ளார். மீட்டெடுக்கும் பொழுது அந்நபரிடம் எவ்வித ஆபரணங்களும் பொருளோ இல்லாமல் நிராதரவாய் இருந்த அவரை மீட்டு திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அந்நபருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் அந்நபர் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளித்து பராமரிக்க கங்காரு கருணை இல்ல நிறுவனர் ராஜாவிடம் வினை செய் அறக்கட்டளை நிறுவனர் கார்த்திக், முஹம்மது இப்ராஹிம், பாலகிருஷ்ணன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் காவல் நிலையம் முன்பு காவலர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.