திருச்சியில் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி:

திருச்சியில் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி:
தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசச்கர வாகனப் பேரணி நேற்று (6.01.2021) நடைபெற்றது. இந்த பேரணியை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணி, திருச்சி தலைமை தபால் நிலையத்தில் புறப்பட்டு கோர்ட், புத்தூர், தில்லைநகர், கரூர் புறவழிச்சாலை வழியாக அண்ணா சிலையை அடைந்தது. இதில், போக்குவரத்து போலீசார், சமூக ஆர்வலர்கள், தலைகவசம் அணிந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு அறிவுரை வழங்கி, அவர்களின் வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டினார்.
