ஆரோக்கியம் தரும் ஆப்பிள்

0

ஆரோக்கியம் தரும் ஆப்பிள்

தினம் ஓர் ஆப்பிள், மருத்துவரைத் தூர வைக்கும் (An apple a day keeps the doctor away)
என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி, நெடுங்காலமாக ஆப்பிள் உடல்நலத்திற்கு மிக நல்லது என்று கருதப்பட்டது. தற்போது ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள், எடைக்குறைவு, கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது.

சந்தா 2

ஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருட்கள் அல்செய்மர்ஸ் (Alzheimer’s), பார்கின்சன் (Parkinson’s) நோய்களிலிருந்து மூளையைப் பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகைப் பொருட்கள் (phenolics) இயற்கையாகவே ஆக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி உடையவை என்பதால், மூளையை நரம்புப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன என கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக்கு நியு யார்க் பகுதியில் விளைந்த ‘ரெட் டெலிசியஸ்’ வகை ஆப்பிள்கள் பயன்படுத்தப்பட்டன. எல்லா ஆப்பிள்களிலும் இவ்வகை வேதிப்பொருட்கள் உள்ளன என்றாலும், அவற்றின் அளவு வருடத்தையும், வளரும் இடத்தையும் பொருத்து மாறுபடும் என்று இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் (ஆதாரம்: Journal of food science, Nov/Dec 2004).

‌சந்தா 1

ஆப்பிள்கள்களைக் கொண்டு, ஆப்பிள் பால் நெடுங்காலமாகத் தயாரிக்கப்படுகிறது. ஆப்பிள் தயிரிலிருந்து கிடைக்கும் பால், திபெத்தில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆரோக்கியம் தரும் ஆப்பிள் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் எடுத்துரைத்தார்

Leave A Reply

Your email address will not be published.