வேளாண் சட்டத்தை திரும்பப்பெற கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்

வேளாண் சட்டத்தை திரும்பப்பெற கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர்
மறியல் போராட்டம்
விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மற்றும் மின்சார சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சாவூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் புது ஆறு பாலம் அருகே சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இம் மறியல் போராட்டத்தில்; மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விவசாயம் மற்றும் பொதுத்துறைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும், இயற்கை வளங்களை கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
