குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக நோட்டிஸ் ஒட்டிய 1098 !

0
1 full

குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக நோட்டிஸ் ஒட்டிய 1098 !

திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் நோட்டீஸ்களை ஆட்டோக்களில் ஒட்டும் பணியை மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார்.

இந்தநிகழ்ச்சியில் சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் முரளி, குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விழிக்கண் குழு உறுப்பினர் பிரபு, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாலகுமார், மணிவண்ணன் மற்றும் சைல்டுலைன் அணி உறுப்பினர்கள் ராபின், ஹென்றி ஆகியோர் கலந்து கொண்டனர்.

2 full

மேலும் குழந்தை தொழிலாளர், சாலையோர ஆதரவற்ற குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு பராமரிப்பு தேவைப்படும் கூடிய குழந்தைகளை கண்டால் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 24 மணி நேரமும் செயல்படும் 10 9 8 எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

3 half

Leave A Reply

Your email address will not be published.