பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்: நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்: நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:
திருச்சி கூட்டுறவுத்துறை பொது விநியோகத் திட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் முழு கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு விநியோகம் செய்யும் பணி நியாயவிலைக்கடைகளில் 04.01.2021 முதல் துவங்கியது.
திருச்சி செங்குளம் காலனி நியாயவிலை கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதை சென்னை உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் சஜன்சிங்சவான் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு,இ.ஆ.ப., இன்று (5.01.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
