லால்குடி தொகுதி பஞ்சாயத்து, யாருக்கு சீட்டு !

0
Business trichy

லால்குடி தொகுதி பஞ்சாயத்து, யாருக்கு சீட்டு !

லால்குடி சட்டமன்ற தொகுதி திருச்சியின் புறநகர் பகுதிகளில் உள்ள, முக்கியமான தொகுதியாகும். வணிக ரீதியாக விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்கள் இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் சர்க்கரை ஆலை, டால்மியா சிமெண்ட், வேளாண் பொறியியல் ஆராய்ச்சி மையம் போன்றவை இந்த தொகுதிக்குள் உள்ள முக்கிய நிறுவனங்கள் ஆகும்.

லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக வின் கோட்டையாகவே கருதப்படுகிறது. 1951ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் சுயேச்சை வெற்றி பெற.காங்கிரஸ் கட்சி மூன்று முறையும், அதிமுக இரண்டு முறையும், திமுக 9 முறையும் வெற்றி பெற்றிருக்கிறது.

loan point

மேலும் 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து 3முறை திமுகவை சேர்ந்து எ.சௌந்தரபாண்டியன் வெற்றி பெற்று வருகிறார். 1989, 1996 ஆண்டு கே.என்.நேரு லால்குடி தொகுதியில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

nammalvar

லால்குடி சட்டமன்றத் தொகுதியில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 1,02,708 ஆண் வாக்காளர்களையும், 1,08,846 பெண் வாக்காளர்களையும், 12 மூன்றாம் பாலினத்தவர்களையும் வாக்காளராக கொண்ட தொகுதி இதுவாகும்.

இந்த தொகுதியின் விவரம் இவ்வாறிருக்க, எந்தக் கட்சியின் சார்பாக யாரெல்லாம் வேட்பாளராக களமிறக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்ற முழு அலசல்.

திமுகவை பொருத்தவரை லால்குடி சட்டமன்ற தொகுதி, திமுகவின் கோட்டையாகவே கருதப்படுகிறது. திமுகவின் முதன்மை செயலாளராக உள்ள கே. என். நேரு பூர்வீகம் இந்த தொகுதி என்பதாலும், தற்போது இருக்கக்கூடிய சௌந்தரபாண்டியன் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று வெற்றி பெற்றவர் என்பதாலும் இந்த தொகுதிக்கும், திமுகவுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய சௌந்தரபாண்டியன் மீண்டும் தொகுதியை கேட்டு முயற்சித்து வருகிறார். ஆனால் புதிய வேட்பாளர்களை களம் இறக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, பெரியசாமி, துரை. கந்தசாமி இவர் ராமஜெயத்தின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.மற்றும் புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் கருணாநிதி ஆகியோர் தொகுதிகளை கேட்டு தீவிர முயற்சியில் களம் இறங்கியிருக்கின்றனர்.

web designer

அதிமுகவை பொறுத்தவரை லால்குடி தொகுதியை வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்று தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார். மேலும் தமிழக முதல்வர் திருச்சி வருகையின்போது லால்குடி தொகுதி முழுக்க பயணம் செய்திருக்கிறார். அதிக நேரம் இந்த தொகுதியில் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 18 கிராமங்களில், கிராமத்திற்கு 2000 பேருக்கு குறைவில்லாமல் முதல்வருக்கு வரவேற்பு அளித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ப.குமார் வேட்பாளர்கள் தேர்வில் அதிக கவனம் செலுத்தவும் முயற்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், அசோகன், நடேசன், புறநகர் இளைஞர் பாசறை செயலாளர் விடிஎம் அன்பில் அருண் நேரு, மற்றும் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அசோக்குமார், வழக்கறிஞர் முத்தமிழ் வேந்தன், ஆகியோர் வேட்பாளர் தேர்வுக்கான பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்களாம்.

திமுகவின் கூட்டணி கட்சியாக உள்ள இந்திய ஜனநாயக கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் ஐஜேகே, லால்குடி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது. கட்சி தலைவரின் மகனான ரவி பச்சமுத்து லால்குடி தொகுதியை கேட்டு முயற்சித்து வருகிறார். திமுகவில் லால்குடி தொகுதிக்கு அதிக பேர் முயற்சித்து வருவதால் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கி விடலாம் என்று திமுக எண்ணி வருகிறதாம்.

நாம் தமிழர் கட்சி சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட மாவட்ட பொறுப்பாளராக உள்ள கலியமூர்த்தி, செயலாளர் பழனியப்பன் மற்றும் சம்பத் ஆகியோருடைய பெயர்கள் தேர்வு பட்டியலில் உள்ளதாக தம்பிகள் கூறுகின்றனர்.

மக்கள் நீதி மையம் சார்பில் வேட்பாளர் களமிறக்க படுவார்கள் என்றும், ஆனால் வேட்பாளர் தேர்வு என்பது தேர்தல் நெருங்கும் சமயத்தில் முடிவு செய்யப்படும் என்றும் கூறுகின்றனர். மேலும் ஒன்றிய பொறுப்பாளர்களும் தொகுதியை கேட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

-மெய்யறிவன்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.