திருச்சியில் 4 பேரை தேடுது சுகாதார துறை: கொரோனா நோயாளிகளா….?

0
1 full

திருச்சியில் 4 பேரை தேடுது சுகாதார துறை: கொரோனா நோயாளிகளா….?

இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதிய வகை கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானநிலையங்களிலே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.  இந்நிலையில், கடந்த 4 வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்திலிருந்து  திருச்சிக்கு விமானத்தில் வந்த 105  பயணிகளை தேடி கரோனா பரிசோதனை மேற்கொள்வதை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இதில், தஞ்சாவூரை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு உருமாறிய கொரோனா உள்ளதா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 105 பயணிகளில் 4 பேருடைய முகவரிகள் போலியாக உள்ளதால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதார துறை அதிகாரிகள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.