கடனுக்கு சிககெட் தர மறுத்ததால் மளிகை கடைக்கு தீ வைப்பு

கடனுக்கு சிககெட் தர மறுத்ததால் மளிகை கடைக்கு தீ வைப்பு:

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரசூல் முகமது. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் ரசூலின் மளிகை கடைக்கு தீ வைத்தனர். இதில் அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின.
இது குறித்து ரசூல் போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த குமரேசனுக்கு கடனுக்கு சிகரெட் தர மறுத்த காரணத்தால் ஆத்திரமடைந்த மளிகை கடையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசனை கைது செய்தனர்.
