திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான குழு கூட்டம்

0
1 full

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான குழு கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் 18
வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை
வழங்குவதற்கான குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு.இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில் இன்று (5.01.2021) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கை,கால் பாதிக்கப்பட்டோர், காதுகேளாத மற்றும் வாய்பேச
இயலாதோர், பார்வையற்றோர் மற்றும் பிற மாற்றுத்திறனாளிகள் என 51
மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 44 இளம் மாற்றுத்திறனாளிகள்
மாதாந்திர உதவித்தொகையாக ரூ1000/- வருவாய்த்துறை மூலமாக வழங்கிட தேர்வு
செய்யப்பட்டனர்.

2 full

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பொறுப்பு துரைமுருகன்,  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.இரவிச்சந்திரன், எலும்பு முறிவு மருத்துவர் சையதுபாக்கர், காது, மூக்கு தொண்டை மருத்துவர் அருளீஸ்வரன், கண் மருத்துவர்
ஜெயப்பரியா,  இயன்முறை சிகிச்சையாளர் ரமேஷ்,  மற்றும் சமூகப் பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.