ரே‌‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 – வினியோகம்

0
1 full

ரே‌‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 – வினியோகம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கூட்டுறவுத்துறை பொது விநியோகத் திட்டத்தில் தமிழர் திருநாளாம்
தை பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரே‌‌ஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் முழு கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் துவங்கியது.

தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 235 ரே‌‌ஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும், இங்கே வசிக்கும் 18,923 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 5 அடி நீளம் முழு கரும்பு
மற்றும் துணிப்பை வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.

2 full

ரே‌‌ஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2,500, பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் திங்கட்கிழமை தொடங்கியது. திருச்சி புத்தூர் சிந்தாமணி வளாகத்தில் பொது வினியோக திட்டம் சார்பில் தனி வட்டாட்சியர் சண்முக ராஜசேகர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ரே‌‌ஷன் கடைகளில் பண புழக்கம் அதிகம் இருக்கும் என்பதால் ஒவ்வொரு கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க பட்டுள்ளது.

3 half

Leave A Reply

Your email address will not be published.