திருச்சியில் காவல்துறை சார்பில் மனுக்கள் மீதான குறைதீர்ப்பு முகாம்

திருச்சியில் காவல்துறை சார்பில் மனுக்கள் மீதான குறைதீர்ப்பு முகாம்
திருச்சியில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்கள், இணையவழியில் பெறப்படும் புகார்கள், வாட்ஸ்அப் மூலம் பெறப்படும் புகார்கள், அனைத்திற்கும் உடனடி தீர்வு காணும் வகையில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை பொதுவான இடத்திற்கு வரவழைத்து மனுக்கள் மீதான குறைதீர்ப்பு முகாம் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் (2.01.2020) நேற்று நடத்தப்பட்டது.
திருச்சியில் கண்டோன்மென்ட் சீனிவாச மஹாலிலும், பொன்மலை ஸ்ரீ மஹாலிலும், கோட்டை சரகத்தில் E.B ரோட்டிலுள்ள நாயுடு மஹாலிலும், மற்றும் ஸ்ரீரங்கத்தில் தில்லை நகர் திருவள்ளுவர் திருமண மண்டபத்திலும் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.

இதில் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், மற்றும் உதவி ஆய்வாளர்கள், கலந்து கொண்டு மனுதாரர்களையும் எதிர் மனுதாரர்களையும் நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். குறைதீர்க்கும் முகாமில் 151 மனுதாரர்களும், 158 எதிர்மனுதாரர்களும், ஆஜர் ஆகி இருந்தனர். இரு தரப்பையும் விசாரணை செய்து 171 மனுக்களில் 141 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
பொதுமக்கள் நலன் கருதி ஒரே நாளில் புகார் மனு மீது விசாரணை செய்யப்பட்டு ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டு வருவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இப்பணியை மேலும் சிறப்பாக செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.
