திருச்சியில் தண்ணீர் கலக்காத தூய பால் வேண்டுமா..?

0
Business trichy

பாலில் உள்ள சத்துக்கள் அனைத்தும் எடுக்கப்பட்டே பாக்கெட் பால் நமது வீடுகளுக்கு வருகின்றன. நமக்கு வரும் பால், குறைந்தது பத்து மணி நேரத்திற்கு முன்பு கறந்து, அவை கெட்டுப் போகாமல் இருக்க குளிரூட்டப்பட்ட பின்பே கிடைக்கிறது. அவற்றை காசு கொடுத்து வாங்கும் நாம், ஒரு வேலைக்கு பயன்படுத்தியது போக மிச்சம் இருப்பதை குளிர்சாதனத்தில் வைத்து அதன் தன்மையை முழுமையாக இழக்கச் செய்கிறோம். இது மிகவும் தவறு என்பதே பாலின் தன்மை குறித்து அறிந்த மருத்துவர்கள் சொல்லும் செய்தியாகும்.

பால் கறந்து வீடு வீடாக விநியோகிக்கும் பால்காரர்கள் கிடைக்கும் வாய்ப்பு நகரவாசிகளுக்கு இல்லாமல் போனதாலேயே பால் பாக்கெட் விற்பனை பெருகியது. இந்த சூழலில் தூய்மையான, தண்ணீர் கலக்காத, கறந்து இரண்டு மணி நேரத்திற்குள் திருச்சி மாநகர மக்களுக்கு அவர்களின் வீடு தேடி சென்று வழங்கும் வாய்ப்பினை வழங்குகிறது கோவின்ஸ் பால். திருச்சி-துறையூர்  செல்லும் சாலையில் புலிவலத்தில் அமைந்திருக்கிறது கோவின்ஸ் மாட்டுப் பண்ணை.  “காலை 5 மணிக்கு கறக்கும் பால் 7.30 மணிக்குள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு கிடைக்கச் செய்கிறோம். மாலை 2 மணிக்கு கறக்கும் பால் 4.30 மணிக்குள் கிடைக்கும்” என்கிறார் இதன் உரிமையாளர் பாலமுரளி.

web designer

தொடர்ந்து கூறுகையில், “ஏ1, ஏ2 என இரண்டு தரத்தில் பால் விற்பனை செய்கிறோம். ஏ1 என்பது சிந்து, ஜெர்சி போன்ற கலப்பின மாடுகளிலிருந்து கறக்கும் பால். ஏ2 என்பது கிரி, மயிலை போன்ற நாட்டுப் மாடுகளிலிருந்து கறந்து வழங்கப்படுகிறது.  நாட்டு மாட்டுப் பால் மிகவும் சத்து உடைய இரண்டு புரதம் கொண்டவை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது. உடலின் பித்தத்தை அப்படியே உரியும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. பெரும்பாலும் மருத்துவர்கள் நாட்டுப் மாட்டுப் பாலையே பரிந்துரைக்கிறார்கள். ஏ1, ஏ2 என இரண்டு பாலும் விற்பனை செய்கிறோம். மாட்டிற்கு வழங்கும் தீவனமும் இயற்கை தீவனமாகவே தருகிறோம். இதனால் கறக்கும் பால் இரசாயணம் இன்றி, சுகாதாரமாக கிடைக்கிறது.

loan point

நாங்கள் கறக்கும் பால், 3 மணி நேரத்திற்குள் வாடிக்கை யாளர்களுக்கு தருவதால் குளிரூட்டம் செய்வதில்லை. காற்று புகாத மூடி கொண்ட கண்ணாடி புட்டியில் அடைக்கப்பட்டு வழங்கு கிறோம். தினமும் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் பாட்டிலை மறுநாள் மாற்றிப் பெருகிறோம். பயன்படுத்தப்பட்ட கண்ணாடி பாட்டிலை நான்கு முறைகளில் சுத்தம் செய்த பின்பே மறுமுறை பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக் பாக்கெட்டில் இல்லாமல் கண்ணாடி பாட்டிலில் தருவதால் இது சுற்றுச்சூழலிற்கு தீங்கு விளைவிக்காது. பசும் நெய் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பாலிலிருந்து (Toned Milk) தயாரிக்கப்பட்ட தயிர் ஆகியவற்றையும் விற்பனை செய்கிறோம்”.” என்றார்.  கோவின்ஸ் பால் தேவைப்படுவோர், பாலை விநியோகம் செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் 97871 42401 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.