2021 சட்டமன்ற தேர்தலில் யாதவர்களுக்கு 12 தொகுதி ஒதுக்க வேண்டும்: பாரதராஜா யாதவ்

0
1 full

2021 சட்டமன்ற தேர்தலில் யாதவர்களுக்கு 12 தொகுதி ஒதுக்க வேண்டும்: பாரதராஜா யாதவ்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் பாரதராஜா யாதவ் நேரில் மனு

திருச்சிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் சந்தித்து வழங்கிய மனு அளித்தார். மனுவில்,
முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவை மீண்டும் அரசு விழாவாக்கி அரசாணையும் வெளியிட்டு நடத்தி வருவதால் ஒட்டு மொத்த தமிழக யாதவர்களின் மனங்களையும் குளிரச்செய்துள்ளீர்கள்.தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் யாதவர்கள் பரவலாக உள்ளனர்.

2 full

தமிழகத்தில் கால்நடை வளர்ப்போர் வாரியம் அமைத்து அதன் தலைவராக யாதவ பிரதிநிதியை நியமிக்க வேண்டும். அரசு கல்வி வேலைவாய்ப்பில் பிற்படுத்தப் பட்டோருக்கான இட உள் ஒதுக்கீட்டில் யாதவ சமுதாயத்துக்கு 16 சதவீதம் வழங்கிட வேண்டும்
ஆவின் சேர்மன் பதவிகளில் யாதவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
தகுதியான யாதவர்களுக்கு ஏ.பி.ஆர்.ஓ.பதவியும் வழங்கிட வேண்டும்.

2021 சட்ட மன்ற பொதுத் தேர்தலில் யாதவர்களுக்கு குறைந்தபட்சம் 12 தொகுதிகளையும், மந்திரிசபையில் 2 பேருக்கு பிரதிதித்துவம் வழங்க வேண்டும். திருச்சி,மதுரை, புதுக்கோட்டை,இராமநாதபுரம் மாவட்டங்களில் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் சிலை நிறுவிட அனுமதிக்கவும், பாடப்புத்தகங்களில் மீண்டும் அழகுமுத்துக்கோன் வரலாற்றினையும் சேர்த்திட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்

3 half

Leave A Reply

Your email address will not be published.