திருச்சியில் புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறிய 1,122 பேர் மீது வழக்குபதிவு:

0
1 full

திருச்சியில் புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறிய 1,122 பேர் மீது வழக்குபதிவு:

2021 ஆம் வருட புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதில் மாநகர போலீஸ் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மேலும், கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று  தடையை மீறி மது அருந்திவிட்டு குடிபோதையில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் அமர்ந்துகொண்டு பொறுப்பற்ற முறையில் அதிவேகமாகவும், ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கியவர்கள், தலைகவசம் அணியாதவர்கள்,  பொது இடங்களில் புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லிக் கொண்டு பொதுமக்களை கேலி செய்தவர்கள், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்திக்கொண்டு மது அருந்தியவர்கள், வெடி வெடித்தவர்கள்,  என மொத்தம் 1,122 பேர் மீது புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.