டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உறுதிமொழி ஏற்பு

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உறுதிமொழி ஏற்பு
மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள கே.டி.கே. அரங்கில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவகா அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு அறிவித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது

இன் நிகழ்வுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய பொருளாளர் ரவிசந்திரன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி விவசாயிகளைக் காப்போம் நாட்டைக் காப்போம் அம்பானி, அதானி பொருட்களைப் புறக்கணிப்போம் மத்திய அரசே மூன்று வேளாண் விரோத சட்டங்களை இரத்துசெய் என்று உறுதிமொழி வாசிக்க ஜனசக்தி உசேன் சௌக்கத்அலி முத்துராமன் ரவி பெருமாள் ஆகியேர் உறுதிமொழி ஏற்றனர்
