வீடுகள்தோறும் நூலகம் அமைப்போம்

0
full

வீடுகள்தோறும் நூலகம் அமைப்போம்

“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு”
– ஒளவையார்

நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும். வாழ்வியல், வரலாறு, இலக்கியம், நிலநூல், மேற்கோள் நூல்கள், சிறுகதைகள், மனோதத்துவம், வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் அனைத்தும் நூலகங்களில் கிடைக்கும்.

poster
ukr

நூலகத்தில் அறிவை வளர்க்கக்கூடிய பலதரப்பட்ட விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். நமது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் விஷயங்களும் அங்குக் கிடைக்கும். மேலும், நமது மொழி வளத்தைப் பெருக்குவதற்கும் வாசிப்பைச் சரளமாக்குவதற்கும் நூலகம் முக்கியப் பங்காற்றுகிறது.

“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு”
என்று ஒளவையார் கூறியுள்ளார்.

நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது அறிவு வளர்ச்சியடையும். அதற்கு முதுகெலும்பாகத் திகழ்வது நூலகமே. அந்த வகையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை திருச்சிராப்பள்ளி புத்தூர் பகுதியில் நூலகம் அமைத்து உள்ளது. வீட்டுக்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பொதுமக்களிடையே பரப்புரை செய்து வருகிறார்

கற்றல் என்பதற்கு சில சிறப்பியல்புகள் காணப்படுகின்றன. இது காலத்துடன் மாற்றமடைந்து செல்லும் . கற்றலானது நாம் ஏற்கனவே பெற்ற அறிவில் தங்கிக் காணப்படுகின்றது. இது நாம் பெற்ற அறிவின் திரட்டு என்பதிலும் பார்க்க ஒரு படிமுறை சார்ந்த வளர்ச்சி ஆகும்.
மனிதனின் கற்றலானது கல்வி, சுயமுன்னேற்றம், பாடசாலை, பயிற்சிகள் என்பவற்றினால் உருவாக்கப்படுகின்றது. இது ஒரு இலக்கை நோக்கியதாகவும் ஊக்கப்படுத்தலினால் அதிகரிக்கப்படுவதாகவும் காணப்படுகின்றது. எனவே ஒவ்வொருவரும் வீட்டில் நூலகம் அமைத்து அவர்களுக்கு தேவையான துறையை தேர்வு செய்து தானும் கற்று சமூகத்திற்கும் கற்பிக்க வேண்டும் என்பதை அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வலியுறுத்தி வருகிறது

half 1

Leave A Reply

Your email address will not be published.