டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: திருச்சியில் 10765 பேர் எழுதுகின்றனர்

0

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: திருச்சியில் 10765 பேர் எழுதுகின்றனர்

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால், Group – I service preliminary examination பதவிக்கான போட்டி தேர்வு 03.01.2021 முற்பகல் (10.00 AM – 01.00 PM) நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 10765 நபர்கள் 36 தேர்வு மையத்தில் இத்தேர்வினை எழுதவுள்ளனா்

சந்தா 2

இத்தேர்விற்கு 36 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்
மேற்படி தோ்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் 4 பறக்கும் படை (flying squad) நியமனம் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 9 இயங்குக்குழுக்கள் (mobile unit) அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலா், ஆயுதம் ஏந்திய ஒரு காவலா் மற்றும் ஒரு அலுவலக உதவியாளரும் இயங்குவர்.

‌சந்தா 1

மேலும் ஒரு தேர்வு மையத்திற்கு ஒரு தேர்வு கண்காணிப்பாளர் வீதம் 36 தேர்வு கூட கண்காணிப்பாளர்கள் மற்றும் ஒரு தேர்வு மையத்திற்கு ஒரு வீடியோகிராபா் வீதம் 36 வீடியோகிராப்பர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் மேலும், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் வழிகாட்டுதல்படி தோ்வு மையங்களில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சாிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோ்வு மையத்தில் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வாளா்கள் தோ்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தோ்வு எழுத வரும் தோ்வாளா்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னனு சாதனங்களும் தோ்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என தோ்வாணையத்தால் தொ்ிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.