பணியாளர் விவரங்களை சமா்ப்பிக்க தனியார் மருத்துமனைகளுக்கு வேண்டுகோள்:

0
1 full

 பணியாளர் விவரங்களை சமா்ப்பிக்க தனியார் மருத்துமனைகளுக்கு வேண்டுகோள்:

இந்திய அரசாங்கம் கோவிட்-19 பெருந்தொற்றிற்கான தடுப்பு மருந்தினை இலவசமாக வழங்க உள்ளது. கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான பயனாளிகளின் விவரங்களை https://hmis.nhp.gov.in  என்ற இணையதள முகவாியில் பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

இவற்றின் முதல் கட்டமாக, கோவிட்-2019 பெருந்தொற்று நோயினை தடுக்க மருத்துவத் துறையினை சார்ந்த அனைத்து அலுவலா்கள், முன்களப்பணியாளா்களுக்கும் மற்றும் இதர பணியாளா்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டு,  திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள்,  சிகிச்சையகம் (Clinic), ஆயுஸ் (AYUSH) போன்ற Clinical Establishment Act-ன் கீழ் பதிவு செய்யப் பெற்ற அனைவாிடமும் பணியாளர்கள் விவரங்களை சமா்ப்பிக்கப்பட வேண்டுமென 02.11.2020 அன்று மாவட்ட ஆட்சியரக அரங்கில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தொிவிக்கப்பட்டது.

2 full

அனைத்து அரசு மருத்துவமனைகளின் விவரங்களும் முழுமையாக 100% சேகாிக்கப்பட்ட நிலையில், 30.12.2020-ன் நிலவரப்படி 372 மருத்துவமனைகள் மட்டுமே தங்களது விவரங்களை அளித்து பதிவு செய்துள்ளனர். எனவே,  அனைத்து தனியார் மருத்துவமனைகளும் விரைந்து தங்களது மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் விவரங்களை 04.01.2021க்குள் சமா்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவா் சு.சிவராசு,இ.ஆ.ப., தொிவித்துள்ளார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.