திருச்சியில் பயன்பாடு இல்லாத கழிப்பறையில் சமூக விரோதச் செயல் !

0
1 full

திருச்சியில் பயன்பாடு இல்லாத கழிப்பறையில் சமூக விரோதச் செயல் !

திருச்சி மத்திய பேருந்து நிலையம் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்த கூடிய இடமாக உள்ளது. இங்கு பல பொது கழிப்பிடங்கள் மற்றும் கட்டண கழிப்பிடங்கள் இருந்தாலும் அனைத்து கழிப்பிடங்களும், சுகாதாரமற்ற முறையிலேயே இருக்கிறது.

 

2 full

மேலும் அப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ‘நம்ம டாய்லெட்’  நவீன பொதுக்கழிப்பிடம்  பயன்பாடு இன்றி காணப்படுகிறது.

இந்த கழிப்பிடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது முதல், ஒரு ஆண்டு மட்டுமே பயன்பாட்டில் இருந்ததாம். மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட  பொது நவீன கழிப்பிடமானது உரிய பராமரிப்பின்றி உள்ளதால்  சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருக்கிறது.

 

எனவே மாநகராட்சி நிர்வாகம்  நம்ம டாய்லெட்யை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

-மகேந்திரன்

3 half

Leave A Reply

Your email address will not be published.