கே.என்.நேருவுக்கு என்னாச்சு ?

0
1 full

கே.என்.நேரு-வுக்கு என்னாச்சு ?

திருச்சி அரசியலில் கே.என். நேரு இன்றியமையாத சக்தியாக இருக்கிறார். அரசியல் களத்தின் முக்கிய புள்ளியாக உள்ள நேரு திமுகவின் முதன்மை செயலாளராக பொறுப்பு, உயர்வு பெற்று தமிழகம் முழுவதும் தனது பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பிறகு தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் திமுகவின் சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.

2 full

இதன் ஒரு பகுதியாக திருச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் அழைக்கப்பட்டு, முதல்நாள் தெற்கு மாவட்டம் முழுவதும் தனது பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். இரண்டாவது நாள் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் மற்றும் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் குறிப்பாக கே. என். நேரு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். நேரு இல்லாத நிலையில் திருச்சியில் திமுக சார்பில் நடத்தப்படும் முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.

ஆனாலும் உடன்பிறப்புகளில் சிலர், என்னதான் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அமைச்சர் (கே.என்.நேரு ) இல்லாமல் திருச்சி கலகட்டல என்று சொல்லி நகர்ந்து சென்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.