புத்தாண்டு கொண்டாட்ட கட்டுபாடுகள் மீறினால் நடவடிக்கை… போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…

0
1 full

புத்தாண்டு கொண்டாட்ட கட்டுபாடுகள் மீறினால் நடவடிக்கை…   போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை.. 

2021 ஆம் வருட புத்தாண்டு தினத்தை முன்னிட்டு  திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்திவிட்டு குடிபோதையில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் அமர்ந்துகொண்டு பொறுப்பற்ற முறையில் அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனங்களை இயக்கி சட்டத்தை மீறும் வகையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல்,பொதுமக்களை கேலி செய்தல்,போன்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது.

2 full

திருச்சி மாநகரில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதலாக காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள் குடிபோதையில் இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மற்றும் அதிவேகமாக ஓட்டுபவர்கள் ஆகியோரை தடுக்க காவல்துறையினர் 50 குழுக்களாக பிரிந்து திருச்சி மாநகரம் முழுவதும் வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள்.

கட்டுப்பாடுகளை மீறிவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.  பொது இடங்களில் புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லிக் கொண்டு பொதுமக்களுக்கு கேலி செய்தாலும்,  அவர்களுக்கு இடையூறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்திக்கொண்டு மது அருந்துதல்,  வெடி வெடித்தல்,  போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா  வைரஸ் நோய் தொற்று தடுப்பதற்காக  2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் 31/12/2020 மற்றும் 1/1/2021 ஆகிய நாட்களில் பொது மக்கள் சாலைகளில் எவ்வித கொண்டாட்டத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வண்ணம் முகக் கவசம் அணிதல் தனிநபர் இடைவெளி ஆகிவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.  புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் எவரேனும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் அந்த தகவலை திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் அவசர தொலைபேசி 100க்கும் மற்றும் 0431-2418070, 96262 73399 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், காவலன் SOS செயலி, Trichy city police என்ற முகநூல் பக்கம் மற்றும் டிவிட்டர் மூலம் தகவல் அளிக்கலாம் என மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.