ஆலயம் அறிவோம்

0
full

ஆலயம் அறிவோம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதர் திருக்கோயில் திருவரங்கம்

மூலவர்: ஸ்ரீ ரெங்கநாதர்
உற்சவர்: ஸ்ரீ நம்பெருமாள்
தாயார்: ஸ்ரீ ரங்கநாயகி
தலவிருட்சம்: புன்னை
தீர்த்தம்: சந்திர தீர்த்தம் & 8 தீர்த்தங்கள்
ஆகமம்: பாஞ்சராத்திரம்
புராணப்பெயர்: திருவரங்கம்

poster

மங்களாசாசனம் பாடியவர்கள்

1. பொங்கை ஆழ்வார்
2. பூத்த ஆழ்வார்
3. பேயாழ்வார்
4. நம்மாழ்வார்
5. பெரியாழ்வார்
6. ஆண்டாள்
7. திருமங்கைஆழ்வார்
8 . குலசேகர ஆழ்வார்
9. திருமாழிசை ஆழ்வார்
10. திருபாணர்ஆழ்வார்
11. தொண்டரணிபொடிஆழ்வார்

தலப்பெருமைகள்

ஸ்ரீ ரெங்கம் ஸ்ரீ ரெங்கநாதர் 108 வைணவ திவ்யபிரதேசத்தில்
முதன்மை தலம்

இது சோழ நாட்டு திருப்பதிகளுள் ஒன்று& முதன்மையானது

இது உலகில் இரண்டாவது இந்து மத பெரிய கோயில்

ஸ்ரீ ரெங்கம் பூலோகவைகுண்டமாகும்

இந்தியாவிலே ஸ்ரீ ரெங்கத்தில் தான் 7 பிரகாரங்களை கொண்டது, கோயிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன

ஒவ்வொரு பிரகாரமும் ஒவ்வொரு லோகத்தை குறிக்கிறது

1. மாடங்கள் சூழ்துள்ள 1. பூலோகம்
திருசுற்று

2.திரிவிக்ரமசோழன் 2.புவர்லோகம்
திருசுற்று

3. அகலங்கனென்னும் .ஸூவர்லோகம்
கிளிச்கசோழன் திருசுற்று

4.திருமங்கைமன்னன் 4. மஹர்லோகம்
திருசுற்று

5.குலசேகரன்திருசுற்று 5. ஜநோலோகம்

6.ராஜமகேந்திரன் 6.தபோலோகம்
திருசுற்று

7.தர்மவர்ம சோழன் 7. ஸத்ய லோகம்
திருசுற்று

ஒன்பது தீர்த்தங்கள்

1. சந்திர புஷ்கரணி
2. வில்வ தீர்த்தம்
3. சம்பு தீர்த்தம்
4 . பகுள தீர்த்தம்
5. பாலசதீர்த்தம்
6. அசுவ தீர்த்தம்
7. ஆம்ர தீர்த்தம்
8. கதம்ப தீர்த்தம்
9. புன்னாக தீர்த்தம்

கோயில் கருவறை மேலே தங்கப்கோபுரம் வேயப்பட்டுள்ளது இது
ரிக், யஜூர், சாம், அதர்வண நான்கு வேதங்களை குறிக்கும் வண்ணம் நான்கு
கலசங்களை கொண்டுள்ளது

ukr

பெரிய கோயில்
பெரிய மதில்
பெரிய பெருமாள்
பெரிய பிராட்டியார்
பெரிய கருடன்
பெரியவரசம்
பெரிய கோபுரம் எனும் பெரிய எனும் பெருமைமிக்க சொற்களால் வரும் தேசம் ஸ்ரீரெங்கம்

ரெங்கனுக்கு உரிய நாச்சிமார்கள்

1. ஸ்ரீ தேவி
2. ஸ்ரீபூதேவி
3. ஸ்ரீதுலுக்க நாச்சியார்
4. ஸ்ரீசேரகுலவல்லி நாச்சியார்
5. ஸ்ரீகமலவல்லி நாச்சியார்
6. ஸ்ரீ கோதை நாச்சியார்
7.ஸ்ரீ ரெங்க நாச்சியார்

வருடத்தில் 7 நாட்கள் மட்டுமே
ஸ்ரீ நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருவார்

1. விருப்பன்திருநாள்
2. வசந்த உற்சவம்
3. விஜய தசமி
4. வேடுபறி
5. பூபதி திருநாள்
6. பெரிய வேட்டை
7. ஆதி பிரமோத்சவம்

வருடத்தில் 7 முறைமட்டுமே

ஸ்ரீ நம்பெருமாள் திருக்கோவியிலை விட்டு வெளியே வருவார்
1. சித்திரை
2. வைகாசி
3. ஆடி
4. புரட்டாசி
5. தை
6. மாசி
7. பங்குனி

ஸ்ரீ செங்கத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் 7 ஆம் நாளன்று ஸ்ரீ ரெங்கநாயகி தாயாருக்கு திருவடி சேவை நடைபெறும்

தமிழ்மாதத்தில் 7 ஆவது மாதமான ஐப்பசி மாதம் 30 நாளும் சுவாமிக்கு தங்ககுடத்தில் யானைமீது புனிதநீர் எடுத்துவரப்படும்

ஸ்ரீ ராமனால் பூஜிக்கப்பட்ட பெருமைக்கு உரியவர் ஸ்ரீ ரெங்கநாதர்

ஸ்ரீ ராம அவதாரம் 7 ஆவது அவதாரம் ஆகும்.

ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சன்னதி முன்பு வருடத்திற்கு 7 உற்சவம் நடைபெறும்

1.கோடை உற்சவம்
2. வசந்த உற்சவம்
3. ஜேஷ்டாபிஷேகம், திருபாவாடை
4. ஊஞ்சல் உற்சவம்
5. அத்யய உற்சவம்
6. பங்குனி உற்சவம்
7. நவராத்திரி

ஸ்ரீ பெருமாள் திருமுகம் உள்ள திசையான தெற்குதிசையில் 7 கோபுரங்கள் உள்ளன

1. நாழிகேட்டான் கோபுரம்
2 . ஆரியபடால் கோபுரம்
3. கார்த்திகை கோபுரம்
4. ரெங்க ரெங்க கோபுரம்
5. தெற்கு கட்டை கோபுரம்
6. தெற்கு கட்டை கோபுரம் 2
7 . ராஜ கோபுரம்

வருடத்தில் ஒருமுறை மட்டுமே கண்டுகளிக்க கூடிய சேவைகள்

1. பூச்சாண்டி சேவை
2. கற்பூர படியேற்ற சேவை
3. மோகினி அலங்காரம், ரத்னங்கிசேவை
4. வெள்ளிகருடன்& வெள்ளிகுதிரை சேவை
5. உறையூர், ஸ்ரீ ரங்கம்& ராமநவமி நேர்த்தி சேவை
6. தாயார் திருடி சேவை
7. ஜாலி சாலி அலங்காரம்

காவிரி நீர் அபிஷேகம்

ஆனி கேட்டை நட்சத்திரம் அன்று உற்சவர் ஸ்ரீ நம்பெருமாளுக்கு 22 குடங்கள் காவேரி நதியில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்யப்படுகிறது . இது ஸ்ரீகாவேரி அன்னையே ஸ்ரீ பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதாய் ஜய்தீகம்

பெருமாளுக்கு 365 போர்வை

கார்த்திகைமாதம் கைசீக ஏகாதசியன்று ஸ்ரீபெருமாளுக்கு விடிய விடிய 365 போர்வைகள் நடத்துவது உண்டு . கார்த்திகை, மார்கழி பனிகாலம்
என்பதால் பெருமாள் மீதான அன்பின் காரணமாய் இதை செய்வார்கள்.

ஸ்ரீ ராமானுஜர் இங்கு நீண்டகாலம்
ரெங்க சேவை செய்துள்ளார் . இங்கே இவர் மோட்சம் அடைந்துள்ளார். இவரது
உடல் இங்கு தனிசன்னதி உண்டு. இதற்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமம், பச்சைகற்பூரம் கலந்த கலவை இவருக்கு பூசப்படுகிறது

ஆலயம் அறிவோம்
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதர் திருக்கோயில்
திருவரங்கம் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் எடுத்துக் கூறினார்

half 1

Leave A Reply

Your email address will not be published.