திருவெறும்பூர் ஜெயிக்க போவது யாரு ? மோதும் அதிமுக குமார் – திமுக மகேஷ்பொய்யாமொழி !

1
1

திருவெறும்பூர் ஜெயிக்க

போவது யாரு ?

மோதும் அதிமுக குமார் – திமுக மகேஷ்பொய்யாமொழி !

2

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக திமுக மகேஷ் பொய்யாமொழி உள்ளார். இவர் கடந்த முறை முதல்முறையாக போட்டியிட்டு இந்த தொகுதியில் வென்றவர் என்பதால் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுவர் என்று கட்சியினர் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் அவர் தொகுதி மாறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றும் அவருக்கு கீழ் உள்ள திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று பேச்சு கிளம்பியது.

ஜெயித்த தொகுதியை விட்டு ஏன் வேறு தொகுதி மாற வேண்டும், இந்த தொகுதியை பலப்படுத்த வேண்டியது தானே என்கிற முணுமுணுப்பும் கட்சியினர் இடையே இருந்த நிலையில் அந்த தொகுதியில் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

திருவெறும்பூர் ஒன்றிய குழு தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சத்யா, துணை தலைவராக சண்முகம் உள்ளனர். மொத்தம் 16 பேர் கவுன்சிலர்களை கொண்ட இந்த ஒன்றியத்தில் திமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர்களின் ஆதரவுடன் 11கவுன்சிலர்களை கொண்டிருந்தது. இதில் அதிமுக 3, தேமுதிக 1 கவுன்சிலர் என்று 4 பேருடன் இருந்தது.

இந்த நிலையில் அதிமுகவின் தெற்கு மா.செ. குமார் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடுவர் என்கிற கணிப்புகள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் அவர் தன்னுடைய அதிரடி அரசியல் வியூகத்தில் திமுகவிற்கு ஆதரவு அளித்த கவுன்சிலர் சுபத்ரா தேவி, கூட்டணி கட்சியான தேமுதிக கவுன்சிலர் விஜி ஆகியோரை அதிமுகவில் இணைத்தார்.

4

இந்த நிலையில் திமுகவில் சீட்டு கிடைக்காமல் சுயேச்சையாக நின்று போட்டியிட்டு வெற்றிபெற்ற சேர்மன் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளித்த தமிழரசி, மற்றும் திமுக கவுன்சிலர் பூமதி ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் அதிமுகவில் இணைந்தனர்.

இதே நேரத்தில் திமுக எம்.எல்.ஏவும், தெற்கு மா.செ. மகேஷ் பொய்யாமொழி செய்த சமரசத்தில் வளர்ச்சிப்பணிக்காக அதிமுக மா.செ.வை சந்தித்தாக அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் 3 கவுன்சிலர்களை கொண்ட அதிமுக 6 கவுன்சிலர்கள் கொண்டதாக மாறியது. திமுகவை சேர்ந்த பூமதி, பொய்கைக்குடியை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் முருகா ஆகியோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணை முடிவு செய்து அதிமுக மா.செ. குமாரை உறுப்பினர் படிவங்கள் வாங்கியுள்ளனர்.

தமிழக முதல்வர் திருச்சி பிரச்சாரத்திற்கு வரும் நேரத்தில் இவர்கள் எல்லோரும் முறைப்படி கட்சியில் இணைகிறார்கள்.

இதனால் தற்போது திருவெறும்பூர் ஒன்றியத்தில் 11 கவுன்சிலர்களை கொண்டிருந்த திமுக 8 ஆக குறைந்துள்ளது. இதிலும் ஒரு கவுன்சிலர் சி.பி.ஐ. அதே சமயம் 3 ஆக இருந்த அதிமுக 8 ஆக அதிகரித்து இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் உள்ளது.

அதிமுகவில் மா.செ. குமாரிடம் உறுப்பினர் படிவம் வாங்கும் திமுக திருவெறும்பூர் ஒன்றிய கவுன்சிலர்கள் முருகன் , பூமதி ஆகியோர்
அதிமுகவில் மா.செ. குமாரிடம் உறுப்பினர் படிவம் வாங்கும் திமுக திருவெறும்பூர் ஒன்றிய கவுன்சிலர்கள் முருகன் , பூமதி ஆகியோர்

இதனால் திமுக ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

திருவெறும்பூர் தொகுதி விட்டு மாறும் மனநிலையில் உள்ள திமுக எம்.எல்.ஏ. இந்த தொகுதியில் தான் போட்டுவார் என்கிற அதிமுக மா.செ. குமார் ஆகியோர் இடையே அரசியல் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. மீண்டும் சட்டமன்ற தேர்தலில் யார் ஜெயிப்பது என்பதன் முன்னோட்டம் தான் திருவெறும்பூர் ஒன்றிய குழு அரசியல் பஞ்சாயத்து என்கிறார்கள் அந்த தொகுதி மக்கள்.

3
1 Comment
  1. Nedunchezhian T says

    கட்டுரை அருமை

Leave A Reply

Your email address will not be published.