உலமாக்களின் உதவித்தொகையை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட முதல்வருக்கு வேண்டுகோள்

உலமாக்களின் உதவித்தொகையை5 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட முதல்வருக்கு வேண்டுகோள்
உலமாக்களின் உதவித்தொகையை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என தமிழக அரசின் முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி, முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரனா தொற்று காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் அரசு கொரனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதை முதற்கண் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.கொரனாவால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் குடும்பம் ஒன்றிற்கு பொங்கல் பரிசாக ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு வழங்க உத்தரவிட்டது,புனித யாத்திரை செல்லும் கிறித்தவர்களுக்கு சலுகைகளை உயர்த்தி வழங்கியது,கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்வு என தொடர்ந்து சில மக்கள் நல அறிவிப்புகளை தமிழக அரசு செய்து வருகிறது.

எம்மதமும் சம்மதம் என்ற வகையில் தமிழ்நாட்டில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலமாக நலிந்த உலமா பெருமக்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை தற்போதைய விலைவாசி நிலையை கருத்தில் கொள்ளும் போது போதுமானதாக இல்லை. எனவே தமிழக அரசு உலமாக்கள் உதவித்தொகையை ரூபாய் ஐயாயிரம் என உயர்த்தி வழங்கிட ஆவனசெய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.மேலும் உலமாக்கள் உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ள தகுதியான நபர்கள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக
தமிழக அரசின் முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்
