திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு DNT சமூக மக்களின் போராட்டம்:

0
full

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு DNT சமூக மக்களின் போராட்டம்

சுதந்திர போராட்டத்தில் உண்மையாக போராடியவர்கள், பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து வளரி, வேல், ஈட்டி போன்ற ஆயுதங்களால் தாக்கி கொன்றவர்களை தற்போது சீர்மரபினர் பழங்குடியினர்(DNT) என்றழைக்கப்படும் தமிழகத்தில் உள்ள 68 சமுதாயத்தை சேர்ந்த 2 கோடி மக்கள் உள்ளனர். வெள்ளையனை எதிர்த்ததற்காக பல ஆயிரக்கணக்கான DNT மக்களை கொத்துக்கொத்தாக கொன்று கடலிலே கொட்டினார்கள்.

ukr

வெள்ளையர்கள் காலத்தில் கண்காணிக்கப்பட வேண்டிய பழங்குடியினர்(NT) எனவும் சுதந்திரத்திற்கு பிறகு சீர்மரபினர் பழங்குடியினர்(DNT) என்றும் அறிவித்து அந்த மக்களுக்கு அனைத்து வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் மேலும் பல துறைகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1979-ல் M.G.R சீர்மரபினர் பழங்குடியினர்(DNT) என்பதை சீர்மரபினர் சமூகம்(DNC) என மாற்றி சலுகைகள் பறிக்கப்பட்டு பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு 2019-ல் மீண்டும் சீர்மரபினர் பழங்குடியினர்(DNT) என மாற்றப்பட்டது. அப்பொழுது மத்திய அரசின் சலுகைகைகளை பெற மட்டுமே DNT செல்லும் மாநில அரசில் DNCயே தொடருவார்கள் என அரசு குறிப்பிட்டிருந்தது தமிழக அரசு செய்த பெரிய துரோகமாக பார்க்கப்படுகிறது.

poster

1).ஒரே சான்றிதழ் DNT என வழங்க வேண்டும் 2). கணக்கெடுப்பு நடத்த கூறி மத்திய அரசு வழங்கிய நிதியை கொண்டு DNT மக்களை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. பின்பு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் மற்றும் சீர்மரபினர் நல சங்க மாநில செயலாளர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள் R.V.பரதன்,
R.V.பாலமுருகன், அகில இந்திய பார்வர்டுபிளாக் மாநில செயலாளர் காசிமாயத்தேவர், சீர்மரபினர் நலச்சங்க பிரச்சார குழு தலைவர் செல்லப்பெருமாள், DNT குழுவின் மாவட்ட நிர்வாகிகள் சார்லஸ், முருகன், பிரகாஷ் சிதம்பரம் மற்றும் DNT சமூகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.