திருச்சி அருகே பழுதடைந்த சாலை சீரமைக்கப்பட்டது:

திருச்சி அருகே பழுதடைந்த சாலை சீரமைக்கப்பட்டது:
திருச்சிராப்பள்ளி பிராட்டியூர் 40வது வட்டம் காவிரி நகர் குறுக்குத் தெரு மழை காலங்களில் சேரும் சகதியுமானது.

பொது மக்கள் பயன்படுத்த இயலாத சூழலில் இருந்த குறுக்கு தெருவினை மக்கள் பயன்படுத்தும் வகையில் சீர் செய்ய வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலர் கே.என்.நேருவிற்கு கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் அரை கிலோமீட்டர் தொலைவிற்கு கிரஷர் மண் அடித்து மழைநீர் தேங்காத வண்ணம் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
