செல்ஃபோன் டவரில் ஏறி போராட்டம் : 7 பேர் கைது
செல்ஃபோன் டவரில் ஏறி போராட்டம் : 7 பேர் கைது
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ரிலையன்ஸ் செல்ஃபோன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு பரிந்துரைத்தது. ஆனால் அப்பரிந்துரை மீது தமிழக ஆளுநர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு அத் தீர்மானம் குறித்து நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால், பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கைக்கு காத்திருப்பதால் 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து முடிவெடுப்பதில் தாமதம் ஆவதாக ஆளுநரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்; தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் கதிரேசன் தலைமையில் 7 பேர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ரிலையன்ஸ் செல்ஃ;போன் டவரில் ஏறி முழக்கங்கள் இட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.