வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்த கலெக்டர்!

வாக்கு எண்ணும் மையங்களை
ஆய்வு செய்த கலெக்டர்!

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் பார்வையிட்டு முதற்கட்ட ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரியில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்படும் இடங்களை நேரில் பார்iவியிட்ட மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், வாக்கு எண்ணப்படும் அறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகு, வாக்குப்பதிவு அலகு, விவிபேட் அலகு ஆகியவை வைக்கப்படும் பாதுகாப்பு அறை, தேர்தல் பார்வையாளர்கள் அறை, ஊடக அறை, கழிவறை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ் ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், வருவாய்க்கோட்ட அலுவலர் வேலுமணி, வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
அதேபோல, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் கும்பகோணம், பாபநாசம். திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிகளுக்கும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேராவூரணி சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்படும் இடங்களை ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
