சனிப்பெயர்ச்சி விழா

சனிப்பெயர்ச்சி விழா

சனிப் பெயர்ச்சி மார்கழி 12ம் தேதி (டிசம்பர் 27) சனி பகவான் தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகர ராசியில் உள்ள உத்திராடம் 2ம் பாதத்திற்கு பெய்ர்ச்சி ஆகி காகம் வாகனத்தில் சனி பகவான் அருள்பாலித்தார்.இதையொட்டி திருச்சிராப்பள்ளி திருச்சி ஆயிர கோத்திர வைசிய குல வடம்பர் வகுப்பாருக்கு சொந்தமான ஸ்ரீ கமலாம்பிகை உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் சனி பெயர்ச்சி விழா நடைபெற்றது.சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். பின்னர் மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவார். வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 27ஆம் தேதி அதிகாலை 5-22 மணிக்கு மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். அப்போது மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தர்மகர்த்தா குழு தலைவர் பழனியப்பன் செட்டியார், துணை தலைவர் கண்ணன் செட்டியார், செயலாளர் அரசு நாகராஜன் செட்டியார் ,உறுப்பினர்கள் மாணிக்கம் ராகவேந்திரன் செட்டியார் உள்ளிட்டோர் ஏற்பாட்டில் அர்ச்சகர் ராஜாமணி குருக்கள் விசேஷ ஹோமங்கள் மற்றும் பூஜைகள், அபிஷேகங்களை செய்தார்.
