கிறிஸ்தவ மக்களின் ஓட்டை ஒருங்கிணைக்க ; 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி !

0
1

கிறிஸ்தவ மக்களின் ஓட்டை ஒருங்கிணைக்க ; 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி !

 

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் சிறுபான்மை மக்கள் நல கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் தலைவர் சாம் ஏசுதாஸ் கூறியது –
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. மேலும் இங்கு கல்லறைகளுக்கு கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. பிஜேபி ஆட்சியில் இவ்வாறாக தொடர்ந்து கிறிஸ்தவ மக்கள் மீதான புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அடிப்பவர்களுக்கு மறு கன்னத்தையும் காட்டு விட்டோம். இனி எங்கள் ஓட்டு அவர்களுக்கு பதிலடியக இருக்கும். கிறிஸ்தவர்களின் ஓட்டுகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். இந்தக் கட்சி கிறிஸ்துவ மக்களின் நலனுக்கான கட்சியாக செய்யப்படும்.

2

இதற்காக பிப்ரவரி 20 சென்னையில் மாநாடு நடத்த உள்ளோம். மேலும் சிறுபான்மை மக்கள் நல கட்சி, பிஜேபி இடம்பெறாத கட்சியோடு இணைந்து தேர்தலில் களம் காண திட்டமிட்டுள்ளோம். அப்படி கூட்டணியில் கேட்கும் சீட்டு கிடைக்காவிட்டால், 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடவும் செய்வோம் இவ்வாறு ஷாம் ஏசு தாஸ் கூறினார்.

இந்த பொது குழுக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.