ரேஷன்கடை ஊழியர் அடித்துக் கொலை!

0
1

ரேஷன்கடை ஊழியர் அடித்துக் கொலை!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ளூர் பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த ரேஷன் கடை ஊழியர் சனிக்கிழமை மாலை அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

பட்டுக்கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்தவர் சி. சிவக்குமார் (45). இவர் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில்
உள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

2

இந்நிலையில் சிவக்குமாருக்கும், அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி
அப் பெண்ணின் மகன் திருப்பூரில் வேலைபார்க்கும் ஹாஜாசெரீப்-க்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து
சனிக்கிழமை திருப்பூரிலிருந்து வந்த ஹாஜா செரிப் அடியாட்கள் சிலருடன் சென்று சிவக்குமாரை கட்டையால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து ஹாஜா செரீப் உள்ளிட்ட கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.