இரத்த தட்டுப்பாட்டைப் போக்க இரத்த தானம் செய்த மாநகராட்சி ஊழியர்கள்!

0

இரத்த தட்டுப்பாட்டைப் போக்க
இரத்த தானம் செய்த மாநகராட்சி ஊழியர்கள்!

கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகரித்துவரும் அறுவைச் சிகிச்சைகளின் எண்ணிக்கையால் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டைப் போக்க தன்னார்வத்துடன் முன்வந்து இரத்த தானம் செய்துள்ளனர் தஞ்சை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்;.

இதன் மூலம், சமூக அக்கறை, சமூக நலன் என வரும்போது மற்றவர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்துள்ளனர் தஞ்சை மாநகராட்சி பணியார்கள்;.
கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர், தற்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து நோயாளிகள் அறுவைச் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர். இதனால்;, அங்கு நாள்தோறும் மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சைகளின் எண்ணிக்கையும், விபத்தினால் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

மேற்படி அறுவைச் சிகிச்சைகளுக்குத் தேவையான இரத்தம் மற்றும் இரத்த கூறுகளின் தேவையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதுநாள் வரை தன்னார்வ அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வ இரத்த கொடையாளிகளின் பங்களிப்புடன் அனைத்து வகையான அறுவைச் சிகிச்சைகளும் தடையில்லாமல் சிறப்பான முறையில் நடைபெற்று வந்தன.

தற்போதுள்ள சூழ்நிலையில், தன்னார்வ இரத்த கொடையாளர்களின் பங்களிப்பு சற்று குறைந்துள்ளது. இதனால், அறுவைச் சிகிச்சைகளுக்கும், பிரசவத்திற்கும் தேவைப்படும் இரத்தம் வழங்குவதில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கிக்கும், ராஜா மிராசுதார் மருத்துவமனை இரத்த வங்கிக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

அவ்விரு மருத்துவமனைகளிலும் உள்ள இரத்த வங்கிகளில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி வளாகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு இரத்ததான முகாமில் மாநகராட்சி செயற் பொறியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் உள்பட மாநகராட்சியைச்; சேர்ந்த அலுவலர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் தன்னார்வத்துடன் முன்வந்து இரத்த தானம் செய்தனர்.இரத்த தான முகாமை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் முன்னிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மருது துரை துவக்கி வைத்தார்.

மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் டாக்டர் வேல்முருகன், ரெட்கிராஸ் பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் இம் முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். காமராஜ் நற்பணி மன்றம், உறவுகள் அறக்கட்டளையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.