கேஸ் சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து நூதன கண்டன ஆர்ப்பாட்டம்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து நூதன கண்டன ஆர்ப்பாட்டம்
விமன் இந்தியா மூவ்மெண்ட் திருச்சி மாவட்டம் சார்பாக திருவெறும்பூர் தொகுதியில் உள்ள ரயில் நகர் பஸ் ஸ்டாப் அருகில் கடந்த 10 நாட்களில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலையை 100க்கும் மேல் உயர்த்திய மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணை தலைவர் தவ்லத் நிஷா வரவேற்றார். மாவட்ட தலைவி மூமினா பேகம் தலைமையுரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மெஹ்ராஜ்பானு ,SDPI கட்சி சுற்றுசூழல் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா , வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக்பாஷா உள்ளிட்டோர் கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள்.

மேற்கு தொகுதி தலைவர் ஷாஜிதா,NWF மாவட்ட தலைவர் பரிதாபர்வீன் மற்றும் நிர்வாகிகள், கேம்பஸ் ப்ரண்ட் ஆஃ ப் இந்தியா மாவட்ட செயலாளர் அசாருதீன், திருவெறும்பூர் தொகுதி செயலாளர் தமீம்அன்சாரி,மேற்கு சட்டமன்ற தொகுதி தலைவர் தளபதிஅப்பாஸ்,SDTU தொழிற்சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாஸ்மந்திரி, பாலக்கரை பகுதி தலைவர் சலீம்,துவாக்குடி கிளை செயலாளர் யாஸீன்,காமராஜ் நகர் கிளையின் துணை தலைவர் அபூபக்கர்_சித்திக் மற்றும் செயல்வீரர்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
