கிறிஸ்துமஸ் விழா:

0
1

கிறிஸ்துமஸ் விழா:

திருச்சிராப்பள்ளி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் (Christmas) , ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் பெருவிழாவாகும். இவ்விழா கிறித்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.

இயேசுவின் பிறப்பு
அனுசரிப்புகள் திருப்பலி, பரிசுப் பரிமாற்றங்கள், குடும்பச் சந்திப்புகள், கிறித்துமசு மரங்களை அலங்கரித்தல், குடில் வைத்தல் என கொண்டாடுவார்கள்
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும்.

2

இக்கொண்டாட்டம் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.
இவ்விழாவில் மணிகண்ட வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜெயந்தி, லதா பாலாஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நோ ஃபுட் வேஸ்ட் திருச்சிராப்பள்ளி கிளை தலைவர் மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் வாழ்த்துரை வழங்கினார். புஷ்பலதா, ராஜ ஷீலா, மகாலட்சுமி, உமா, புவனேஸ்வரி, ஜெயந்தி, விஜயா, சாவித்திரி, ஜெயராணி உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.