திருச்சி விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்:

திருச்சி விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்:

திருச்சி விமான நிலையத்தில் நேற்று 22/11/2020 இரண்டு பயணிகளிடம் இருந்து
73 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த சிறப்பு விமானத்தில் வந்த பயணி 1 கிலோ 175 கிராம் தங்கத்தை மறைந்து கடத்தி வந்துள்ளார்.
இதேபோல் நேற்று சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணி 249 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.73 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
