கிறிஸ்துமஸ் கொண்டாட கட்டுபாடுகள் மீறினால் நடவடிக்கை:

0
1

கிறிஸ்துமஸ் கொண்டாட கட்டுபாடுகள் மீறினால் நடவடிக்கை:

Helios

தமிழக அரசு 16.12.2020 அன்று வெளியிட்ட அரசாணையில் மதம் சார்ந்த நிகழ்வுகளில் நடத்தப்படும் விழாக்களை மாவட்ட ஆட்சியா் முன்அனுமதி பெற்று கொரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகளின்படி திறந்த வெளி அரங்குகளில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் 50% அளவிற்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

2

எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 25.12.2020 அன்று தேவாலயங்களில் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் தினவிழா நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறு நடத்தப்படும் திறந்தவெளி நிகழ்ச்சியில் 50%  அளவிற்கு மிகாமல் சமூக இடைவெளி கடைப்பிடித்து நடத்தப்பட வேண்டும் எனவும் தேவாலய பாதிரிமார்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவா் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியா் அனுமதி பெறாமல் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட  நபா்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட
ஆட்சித்தலைவா்  எச்சாித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.