அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ரிலையன்ஸ் டிஜிட்டல் மால்களை மூடக்கோரி மாபெரும் முற்றுகை போராட்டம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ரிலையன்ஸ் டிஜிட்டல் மால்களை மூடக்கோரி மாபெரும் முற்றுகை போராட்டம்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ரிலையன்ஸ் டிஜிட்டல் மால்களை மூடக்கோரி மாபெரும் முற்றுகை போராட்டம் திருச்சி அரியமங்கலத்தில் நடைபெற்றது அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் செல்வக்குமார், புறநகர் மாவட்ட செயலாளர் ஜான்சன் ராஜ்குமார் தலைமை வகித்தனர். மாநகர் மாவட்ட தலைவர் முருகேசன், புறநகர் மாவட்ட தலைவர் அப்துல் காதர், திருவாரூர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் பிரபாகரன், தஞ்சை மாவட்ட தலைவர் இளையராஜா, புதுக்கோட்டை மாவட்ட தலைவர் கைலாச பாண்டியன், கரூர் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை மாவட்ட செயலாளர் முகில், நாகை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், கரூர் மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன், வழக்கறிஞர் மாநிலக்குழு பவதாரணி, துர்கா தேவி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், புறநகர் மாவட்ட குழு ராஜ்குமார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில துணைச்செயலாளர் அருள்ராஜன், துணைத் தலைவர் ராஜேந்திரன், மாநில துணைச்செயலாளர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் கோரிக்கை விளக்க உரையாற்றினார்கள். நிறைவாக திருச்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் சுதாகர் நன்றியுரை ஆற்றினார்.
