பழங்குடியின குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

0
1

பழங்குடியின குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

திருச்சி மாவட்டம் ,துறையூர் வட்டாரம், கோம்பை ஊராட்சி மருதை கிராமத்தில் மலைவாழ், பழங்குடியின மக்களுக்கு பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் விளையாட்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் ரவீந்திரன் அவர்களின் தலைமையில் 22.12.20ல் நடைபெற்றது.

மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி,மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விழிக்கண் குழு உறுப்பினர் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபு, திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப் ஆப் சக்தி தலைவர் வளர்மதி, சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம் நிர்வாகி பிரமிளா, சைல்டு லைன் ஆலோசகர் அஷரப் , கால்நடை பராமரிப்பு துறை ஆய்வாளர் சரவணன், செங்காட்டுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் அனிஷ், அன்னை தெரசா டிரஸ்ட் மேலாளர் மோகன்ராஜ், மக்கள் பாதுகாப்பு மையம் தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் பெண்கள் நலன் சார்ந்த சட்டங்கள் குடும்ப வன்முறை சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், பணி தளத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் மேலும் பாதுகாப்பு பராமரிப்பு தேவைப்படக்கூடிய பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய பணிகளான பாதுகாப்பு பராமரிப்பு , மருத்துவம், உளவியல் ஆலோசனை, சட்டம் சார்ந்த உதவி ,காவல் நிலைய உதவி ஆகியவை வழங்கப்படுகின்றது.

2

பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து தகவல் தெரிவிக்க இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 181 செயல்பாடுகள் குறித்தும்,குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், குழந்தை திருமண தடுப்பு சட்டம், குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் ,பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மேலும் பெண் சிசுக்கொலை,கருக்கலைப்பு, சட்டவிரோதமாக குழந்தைகளை தத்து எடுத்தல், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்தும் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து தகவல் தெரிவிக்க இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்தும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களால் பெண்கள்,குழந்தைகள் பாதுகாப்பான சமுதாயம் உருவாக்கிட உருவாக்கப்பட்ட கேடயம் திட்டத்தின் கைபேசி எண்கள் 9384501999,63830 71800 குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், முன்பருவ கல்வி குழந்தைகள் ஆகியோருக்கு அங்கன்வாடி மையத்தின் மூலம் செய்யப்படும் பணிகள் ஊட்டச்சத்து அவசியம் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மலைவாழ் பழங்குடியினமக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் நடத்தப்பட்டது.கபாடி போட்டி, கோலப்போட்டி,இசைநாற்கலிமுதலிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டு அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.300க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள், குழந்தைகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், இளைஞர்கள்,கிராம முக்கியஸ்தர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் சரஸ்வதி நன்றி கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.