திருச்சியில் 3 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறப்பு:

0

திருச்சியில் 3 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறப்பு:

திருச்சியில் தென்னூர், சங்கிலியாண்டபுரம், மற்றும்  தாயனூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் முதலமைச்சரின் அம்மாவின் மினி கிளினிக்  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் (23.12.2020) இன்று துவக்கி வைத்தனர்.

பின்னர், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  சு. சிவராசு இ.ஆ.ப.,மற்றும்  மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் லட்சுமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.