உறையூர் பகுதியில் மக்களை இடிப்பது போல் சென்ற வாகனத்தில் கொத்துக் கொத்தாக சாவி, துரத்திப் பிடித்த மக்கள் !

உறையூர் பகுதியில் மக்களை இடிப்பது போல் சென்ற வாகனத்தில் கொத்துக் கொத்தாக சாவி, துரத்திப் பிடித்த மக்கள் !
திருச்சி உறையூர் குறதெரு பகுதியில் இன்று 22/12/2020 காலை 6.30 மணி அளவில் சென்னை எண் பதிவுசெய்யப்பட்ட, நீல நிற கார் ஒன்று அந்த பகுதியில் கோலமிடும் பெண்களை இடிக்கும் விதமாகவும் மேலும் அருகில் இருந்த இரு சக்கர வாகனங்களை மோதி சென்றது.

இதனால் அங்கிருந்த பெண்கள் சத்தமிட, அந்தப் பகுதி மக்கள் வாகனத்தை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். ஒரு இடத்தில் சாலை குறுகலாக இருக்க வாகனத்தில் தொடர்ந்து செல்ல முடியாத நிலையில், அப்படியே நிறுத்திவிட்டு மர்மநபர் தப்பித்துச் சென்றிருக்கிறான்.

இந்தநிலையில் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையினர் வந்து பார்க்கும் பொழுது வாகனத்தில் கொத்துக் கொத்தாக நான்கு சக்கர, இருசக்கர வாகனங்களின் சாவி மற்றும் நட்டு, போல்டுகள் இருந்தது. இந்த நிலையில் வாகனத்தை கைப்பற்றி காவல் நிலையம் எடுத்துச் சென்றனர் காவல்துறையினர். மேலும் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய உள்ளனர்.
