திருச்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு:
திருச்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு:
திருச்சி மாவட்டத்தில் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் திருச்சி கிழக்கு, மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையான திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு (21.12.2020) நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.