திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி:

0
1

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி:

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் உன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (32) . இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அருகில் உள்ள நிலத்திற்கு  சொந்தமானவர்களுடன் பாதை தகராறு இருந்துள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக முசிறி கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பழனிச்சாமியின் நிலத்தில் உறவினர்களால் 12 அடி பாதையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதைக் தட்டிக்கேட்ட சென்ற பழனிச்சாமியை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

2

இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த பழனிச்சாமி நேற்று (21.12.2020) திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக தனது மனைவி, குழந்தையுடன் வந்தார். தீடீரென பழனிச்சாமி மறைந்து வைத்து இருந்த மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் அவரை தடுத்தி நிறுத்தி  பழனிச்சாமியை ஆட்சியரிடம்  அழைத்து சென்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.