திருச்சியில் வாட்அப் மூலம் 538 மனு:

திருச்சியில் வாட்அப் மூலம் 538 மனு:
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலகத்தில் நேற்று (21.12.2020) நடைபெற்ற வாராந்திர
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் வாட்சப் செயலி மூலம் 538 மனுக்கள் பெறப்பட்டது.
குறைதீர்க்கும் நாளில் வாட்சப் செயலி மூலம் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும்; நிலம் தொடா்பான மனுக்கள் என மொத்தம் 538 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவா் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை
எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
