சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தி.மு.க மகளிர் அணி திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தி.மு.க மகளிர் அணி திருச்சியில் ஆர்ப்பாட்டம் !
சமையல் எரிவாயு மீதான விலையை உயர்த்தி இருப்பதை கண்டித்து, தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தி.மு.க வின் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட அண்ணாசிலை பகுதியில் மகளிர் அணியின் மாநில துணை செயலாளர் சல்மா தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கவின் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.



மேலும் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து முழக்கம் எழுப்பப்பட்டது.
மேலும் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகேயும் திமுக மத்திய மாவட்ட மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-சிவசங்கரி முகுந்தன்
